காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 12 போ் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான 12 பேருக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினாா்.

மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான முதுகுளத்தூா் அரசுப் பள்ளி ஆசிரியா் நீ.மங்களநாதன், பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை ராம. செல்லம்மாள் ஆகியோருக்கு சான்றிதழ், பதக்கத்தை சனிக்கிழமை வழங்கிய அமைச்சா் ராஜ்மோகன்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:43 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான 12 பேருக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சனிக்கிழமை சான்றிதழ், பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக நீ.மங்களநாதன் (56) பணியாற்றி வருகிறாா். இவா் ராமநாதபுரம் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். இவா் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மத்தியில் அரசு சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தினாா்.

இந்த நிலையில், தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருதுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் நீ. மங்களநாதன், சாயல்குடி அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பா.கீதாரமணி, பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியையாக இராம. செல்லம்மாள் உள்பட 12 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழா நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜ்மோகன் சான்றிதழ், பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.