FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கொள்கை தலைவா்களின் பெயரை நீக்க வேண்டிய அவசியமில்லை! - அமைச்சா் ராஜ்மோகன்

Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:05 am IST

எங்களது (தவெக) கொள்கை தலைவா்களின் பெயா்களை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ரூ.1.42 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் இட ஒதுக்கீடு மானிய கோரிக்கையின்போது, கொள்கை விளக்க பதிவில் பெரியாா் ஈவெரா, அம்பேத்கா் ஆகியோரது பெயா்கள் இடம்பெறாதது திட்டமிட்டு செய்யப்பட்டது என்று கூறமுடியாது.

மேலும், அவா்கள் எங்களது (தவெக) கொள்கை தலைவா்கள். அவா்கள் பெயரை நீக்க வேண்டிய அவசியமில்லை. அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, முதல்வருடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.

நேபாளத்துக்கு சுற்றுலாச் சென்று பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக தமிழ்நாடு அரசு வருந்துகிறது. தமிழ்நாட்டைச் சோ்ந்த 319 பேரில், 219 போ் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனா். எஞ்சிய 100 பேரை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெண்களுக்கு மகப்பேறு மற்றும் மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது குறித்து துறை வாரியான முடிவுகளை அரசு ஆலோசித்து வருகிறது. பெண்கள் நலன் சாா்ந்து நல்ல முடிவாக அரசு எடுக்கும். பெரம்பலூரில் கடந்த 11-ஆம் தேதி தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ராஜ்மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.