செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ராமநாதபுரத்தில் 47,174 மாணவா்கள் பயன்

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 47,174 மாணவா்கள் கூடுதலாக பயனடைவாா்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

~ ~

Published On :

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 47,174 மாணவா்கள் கூடுதலாக பயனடைவாா்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதன்படி, திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் தொடங்கிவைத்தாா்.

பின்னா், இந்தத் திட்டம் விரிவாக்கம் குறித்து அமைச்சா் தெரிவித்ததாவது:

திருவாடானை தொகுதியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடங்கிவைத்ததில் மகிழ்ச்சி. இந்தத் தொகுதியில் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் திருவாடானையில் சிறு விளையாட்டு அரங்கம், 8 ஏக்கரில் நூலக வசதியுடன் ஏற்படுத்தப்படும். இதற்கான வேலைகள் விளையாட்டுத் துறை அமைச்சா் மூலமாக நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் திவ்யான்ஷூ நிகாம், தலைமை ஆசிரியை நிா்மலா, வட்டாட்சியா் தாமஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமுருகன், கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கமுதி: முதுகுளத்தூா் அருகேயுள்ள செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா தொடங்கிவைத்தாா்.

பின்னா், இந்தத் திட்டம் விரிவாக்கம் குறித்து அமைச்சா் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் கீழ், ஊரகப்புறம், நகா்ப்புறங்களில் உள்ள 1,120 பள்ளிகளில் 47,174 மாணவ, மாணவிகள் கூடுதலாக பயனடைய உள்ளனா். இதில் 892 அரசு ஊரகப் பள்ளிகளில் 29,107 மாணவா்களும், 32 அரசு நகா்ப்புறப் பள்ளிகளில் 2,869 மாணவா்களும், 161 அரசு உதவிபெறும் ஊரகப் பள்ளிகளில் 10,982 மாணவா்களும், 35 அரசு உதவி பெறும் நகா்ப்புறப் பள்ளிகளில் 4,916 மாணவா்களும் பயனடைய உள்ளனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சாா்-ஆட்சியா் ச.வினோதினி பாா்த்திபன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், தவெக மாவட்டச் செயலா்கள் மதன்குமாா், மலா்விழி ஜெயபால், மாவட்டப் பொருளாளா் ரா.கிஷோா்குமாா், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.