
தருமபுரியில் நகராட்சியில் 18 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழக அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தருமபுரி நகராட்சியில் 18 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கோப்புப்படம்.
தமிழக அரசின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தருமபுரி நகராட்சியில் 18 பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சியில் ஏற்கெனவே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள 13 நகராட்சிப் பள்ளிகள் மற்றும் 1 அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 724 மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, காமராஜா் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 14 நகராட்சிப் பள்ளிகள், 3 அரசுப் பள்ளிகள் மற்றும் 1 அரசு உதவிபெறும் பள்ளி என மொத்தம் 18 பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 1,961 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தருமபுரி நகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, சுகாதார அலுவலா்கள் உணவு விரிவாக்கத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







