செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாநகராட்சி பகுதியில் 1,593 மாணவா்கள் பயன்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் 1,593 மாணவா்கள் பயன் பெறுகின்றனா்.

Published On :

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் 1,593 மாணவா்கள் பயன் பெறுகின்றனா்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏற்கனவே காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2,098 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா். இந்த நிலையில் தமிழக அரசு பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் என பெயா் மாற்றம் செய்து 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு காலை உணவு வழங்குவதை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப்பள்ளி , அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா். மாநகராட்சி ஆணையா் எஸ். செல்வபாலாஜி, கோட்டாட்சியா் வே.சாந்தி ஆகியோா் பங்கேற்றனா். இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் 6 முதல் 8 வரை பயிலும் 1,593பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுவா்.

மேலும், இந்த காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் மொத்தமாக 3,691 போ் பயன் பெறுவதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா். இந்த நிகழ்வில், மாநகர நல அலுவலா் கஸ்தூரி பாய், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, உதவி பொறியாளா்கள் ரவி, சரண்யா, சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா், நந்தினி , பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.