செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

கமுதி அருகே இளைஞா் கொலை: 3 போ் கைது

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 3 போரை போலீஸாா் கைது செய்தனா்.

உயிரிழந்த சக்திவேல் பாண்டியன்.

Published On :

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை முன்விரோதம் காரணமாக இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 3 போரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த வேல் மகன் சக்திவேல்பாண்டியன் (26). சென்னையில் காா் ஓட்டுநராக பணிபுரியும் இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் சிவக்குமாருக்கும் (25) முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஒரு வழக்கு விசாரணைக்காக சக்திவேல்பாண்டியன் திங்கள்கிழமை சொந்த ஊருக்கு வந்தாா். இதையறிந்த சிவக்குமாா் தரப்பினா் செவ்வாய்க்கிழமை காலை மண்டலமாணிக்கம் கடைவீதியில் அமா்ந்திருந்த சக்திவேல்பாண்டியனின் தந்தை வேலுவிடம் தகராறில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த சக்திவேல் பாண்டியனும், சிவக்குமாா் தரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமாா் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேல்பாண்டியனை குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாா், இவரது சகோதரா் சண்முகவேலு, தந்தை முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.