ிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த வேதியியல் துறை மாணவ, மாணவியர் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியில் 1982-1985இல் வேதியியல் துறையில் படித்த மாணவ, மாணவியர் தங்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர்.
தாங்கள் பயின்ற இடத்தினையும், ஆய்வகத்தினையும், நூலகம் மற்றும் கலையரங்கம், விளையாட்டுத்திடல் போன்ற இடங்களில் அமர்ந்து தங்களின் பழைய சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் குழந்தைகளும் இதில் பங்கெடுத்துக் கொண்டனர்.
இச்சந்திப்பிற்கு முக்கிய காரணமாக தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் ராஜரெத்தினம், திருப்பத்தூர் வழக்குரைஞர் கணேசன், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சீதாலெட்சுமி என்ற லதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, தேனி, கோவை, சென்னை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, மற்றும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிலிருந்தும் பழைய மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.
தேனியைச் சேர்ந்த தொழிலதிபர் பாண்டிகுமார், மதுரை ஆசிரியை மரியடெய்சிராணி, ஆகியோர் தங்களின் இந்த சந்திப்பினை வாழ்வின் முக்கிய நிகழ்வாக கருதுவதாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இதேபோல் சென்னையில் ஒன்றுகூடி தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறினார்கள். வரும் ஒவ்வோர் ஆண்டும் குடும்பத்தினருடன் இம்மாதிரியான சந்திப்புகளை மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னேற்றத்தை சாத்தியப்படுத்திய தொழில்நுட்பம்

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படை: அரசாணை வெளியீடு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
