பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வைரவபுரம் ஸ்ரீ நல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

: காரைக்குடி வைரவபுரம், நவரத்தின நகர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்குவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்க

Updated On :13 மே 2013, 12:14 am IST

: காரைக்குடி வைரவபுரம், நவரத்தின நகர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்குவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 இக்கோயிலில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டும், மூலகோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்றன.

 அதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்காக கடந்த வியாழக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, தனபூஜைகளுடன் விழா தொடங்கியது.

  வெள்ளிக்கிழமை மாலை முதல்கால யாக பூஜை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம்கால யாகபூஜை பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.

 பின்னர் கடம்புறப்பாடு நடைபெற்று காலை 11 மணிக்கு ராஜகோபுரம், மூலக் கோபுரங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சைசிவாச்சாரியார் தலைமையில் சிவாச் சாரியார்கள் பூஜைகளை நிகழ்த்தினர். பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது.   ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். மதியம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 விழாவில்,காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் சோழன் சித. பழனிச்சாமி, சங்கராபுரம் ஊராட்சித்தலைவர் எஸ். மாங்குடி, காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் சோ. மெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏகேஎம்.பாண்டி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.