: காரைக்குடி வைரவபுரம், நவரத்தின நகர் பகுதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீநல்லமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்குவிழா ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கோயிலில் ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டும், மூலகோபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழாவுக்காக கடந்த வியாழக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர, தனபூஜைகளுடன் விழா தொடங்கியது.
வெள்ளிக்கிழமை மாலை முதல்கால யாக பூஜை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம்கால யாகபூஜை பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது.
பின்னர் கடம்புறப்பாடு நடைபெற்று காலை 11 மணிக்கு ராஜகோபுரம், மூலக் கோபுரங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி பிச்சைசிவாச்சாரியார் தலைமையில் சிவாச் சாரியார்கள் பூஜைகளை நிகழ்த்தினர். பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர். மதியம் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில்,காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் சோழன் சித. பழனிச்சாமி, சங்கராபுரம் ஊராட்சித்தலைவர் எஸ். மாங்குடி, காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் சோ. மெய்யப்பன், சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏகேஎம்.பாண்டி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


