காரைக்குடியில் குழந்தை இலக்கிய தின விழா

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பாவின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, காரைக்குடி சிவானந்த மகாலில் குழந்தை இலக்கிய தின விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பாவின் 95-ஆவது பிறந்த நாளையொட்டி, காரைக்குடி சிவானந்த மகாலில் குழந்தை இலக்கிய தின விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   விழாவில், கவிஞர் செல்லகணபதி தலைமை வகித்து, கோவை விஜயா பதிப்பகம் பதிப்பித்த குழந்தைக் கவிஞரின் பழைய கதை, புதிய பாடல் என்ற புதிய நூலை வெளியிட்டுப்பேசினார். அதன் முதல் பிரதியை சிவானந்த மகால் உரிமையாளர் கயிலைமணி மு. அருணாசலம் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.
விழாவில் சென்னை இலக்கியச்சாரல் அமைப்பாளர் இளையவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கவிஞர் அழ. வள்ளியப்பாவின் இலக்கியப்பணிகள், மனிதநேயப் பண்புகள் குறித்துச் சிறப்பு ரையாற்றினார்.
கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் பாடிய குழந்தைக் கவிஞரின் 12 பாடல்கள் காணொலிக்காட்சியாக காண்பிக்கப்பட்டது. காரைக்குடி அழகப்பா பள்ளிகள், கோவிலூர் ஆண்டவர் மெட்ரிக் பள்ளி மற்றும் கவிமணி குழந்தைகள் சங்க உறுப்பினர்கள் அழ. வள்ளியப்பாவின் படைப்புக்களிலிருந்து ஆடல், பாடல் மற்றும் நாடகமாக கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
விழாவில், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத்தலைவர் பேராசிரியர் அய்க்கண், காரைக்குடித் தொழில்வணிகக் கழகத் தலைவர் சாமி. திராவிடமணி, பேராசிரியர்கள், பல்வேறு பள்ளி களின் ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
  முன்னதாக குழந்தைக்கவிஞர் வள்ளியப்பாவின் புதல்வர் வ. அழகப்பன் வரவேற்றார். கவிஞரின் புதல்வி கள் அலுமேலு, தேவி நாச்சியப்பன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் கவிஞரின் புதல்வி உமையாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com