பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருத்தளிநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:53 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
 குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்ட இந்த ஆலயத்தில்பிரதோஷ விழாவை முன்னிட்டு திருத்தளிநாதருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீர், சொர்ணம், பன்னீர், உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
மேலும் சிவனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று உற்சவர் உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் உள்பிரகாரத்தை பக்தர்களின் ஹரஹர சங்கர கோஷத்துடன் மும்முறை வலம் வந்தார். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். பகதர்கள் அனைவருக்கும் பிரதோஷ குழுவினரால் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.