சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பேரூராட்சியில் கால்நடை மருத்துவ கட்டடத்தை கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் திங்கள்கிழமையன்று திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை ஊராட்சியில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் புதிய கால்நடை மருத்துவ கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. சிவகங்கை மக்களவை உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
நெற்குப்பையில் ரூ.23.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றது முதல், கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் எடுத்து பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி வந்தார். அந்த அடிப்படையில்
கிராமப்பகுதிகளில் அதிகளவு கால்நடைகளை பராமரிக்க வேண்டும்.
மேலும் விவசாயப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமென எண்ணி கால்நடைப் பராமரிப்புத்துறைக்கு தேவையான நிதி வழங்குவதுடன் பொதுமக்களுக்கு விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இங்கு புதிய கால்நடை மருத்துவர் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மருத்துவமனை கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் இணைப்புச் சாலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதை நிறைவேற்றும் விதமாக மக்களவை உறுப்பினர் நிதியில் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்பகுதிக்கு அருகாமையிலுள்ள புழுதிப்பட்டியில் நடப்பாண்டில் புதிய கால்நடை மருந்தக கட்டடம் கட்ட உத்தரவிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கருணாகரன், உதவி இயக்குநர்
முகமது நாசர், உதவிப் பொறியாளர் கண்ணன், கால்நடை மருத்துவர் மரு.பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், நகர்ச் செயலாளர் இப்ராகிம்ஷா, நெற்குப்பை முன்னாள் பேரூராட்சிமன்றத் தலைவர் சஞ்சீவி, அம்மா பேரவை நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


