
மானாமதுரையில் மின்வாரிய ஊழியரை கத்தியால் குத்தியதாக தாய், மகனை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
மானாமதுரை பட்டரை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (45). தச்சுத் தொழிலாளியான இவரது மனைவி சாந்தி(40). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாந்திக்கும், சிவகங்கையைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் மாரிப்பாண்டிக்கும் (40) தகாத தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாரிப்பாண்டி மது போதையில் மானாமதுரைக்கு வந்து, கணேசனிடம் புதன்கிழமை தகராறு செய்தாராம். அப்போது மாரிப்பாண்டிக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதையடுத்து அவர், மானாமதுரைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸார் வழக்குப்பதிந்து, கணேசன், அவரது தாய் காயாம்பு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




