அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில்செப்-8 இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இது குறித்து அதன் மேலாண்மை இயக்குநர் பி. ரவீந்திரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில சட்டப் பணிகள் குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காண தேசிய மெகா லோக்-அதாலத் நடைபெறவுள்ளது.
இதில், கும்பகோணம் கோட்டத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கு சமரசத் தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயன்பெறலாம்.
இது தொடர்பாக கும்பகோணம் மண்டல அலுவலகத்தை 0435-2403724 - 26 என்ற தொலைபேசி எண்களிலோ, 94878-02399, 86675-90214 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி மண்டல அலுவலகத்தை 0431-2415551-54, 94878-98057 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடி மண்டல அலுவலகத்தை 04565-234125 - 26, 94878-98095, 63794-97617 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தை 04322 - 266111, 94878-98067 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






