‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மானாமதுரையில் பாரதியார் பிறந்த நாள் விழா

மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா, சிறப்பு படைப்பரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா, சிறப்பு 
படைப்பரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெங்கடேஸ்வரா  நர்சரி பள்ளியில் நடைபெற்ற இவ் விழாவுக்கு தமுஎகச மாவட்டத் துணைத்தலைவர் செல்வகதிரவன் தலைமை வகித்தார். ஆசிரியர் சபரிராஜன் முன்னிலை வகித்தார். பாரதியாரின் நினைவுகள் குறித்து மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன், மாவட்டச் செயலாளர் சங்கரசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன், கிளைச்செயலாளர் தேவதாஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர். 
படைப்பரங்கத்தில் பாரதியின் நினைவுகள் குறித்து படைப்பாளிகள் சிறுகதைகள், ஓவியங்கள், கவிதைகள் மற்றும் பாடல்கள் சமர்ப்பித்து பேசினர். இதில் டிச. 11 இல் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பாரதியார் பிறந்தநாளை விழாவாக நடத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பள்ளிகளில் தாய் மொழிப் பாடம் முதன்மை பாடமாக இருத்தல் வேண்டும். பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழாசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் ராஜாராமன் வரவேற்றார். முடிவில், ஓவிய ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் தேவதாஸ், சேவியர், ரசீந்திரகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.