சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் திங்கள்கிழமை உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்தது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, இளையான்குடி பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுகின்றனர். இளையான்குடியை கடந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கும் இத்திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்லும் இக்குடிநீர் திட்டக் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பின்னர் தாமதமாக குடிநீர் திட்டத்தை பராமரிக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைப்பை சரி செய்யும் நிலை இருந்து வருகிறது. இந் நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இளையான்குடி அருகே இந்திராநகர்-திருவுடையார்புரம் இடையே காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் தண்ணீர், அருகேயுள்ள சாலையில் பெருக்கெடுத்து ஓடி அருகேயுள்ள வயல்களில் தேங்கி வருகிறது.
இது குறித்து குடிநீர் திட்டத்தை பராமரிக்கும் குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இளையான்குடி பகுதியைக் கடந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் செல்லும் காவிரி நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நியூசி. நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

புகழ்பெற்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்!

அடுத்த 2 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics


