தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்பது குறித்து...

News image

படம் | பிசிசிஐ

Updated On :27 ஜூன் 2026, 6:47 pm IST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் பி பிரிவிலிருந்து தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அந்தப் பிரிவில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?

குரூப் ஏ பிரிவில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. இரண்டாவது அணியாக இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளில் யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நாளை நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தையும், இந்தியா ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளின் முடிவைப் பொறுத்தே யார் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்பது தெரியும். தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில், அந்த அணி 8 புள்ளிகள் பெறும். ஆனால், இந்திய அணி ரன் ரேட்டில் தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் நல்ல நிலையில் உள்ளது. அதனால், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிப் போட்டிக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும்.

நாளை நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வங்கதேசமும், இந்தியாவை ஆஸ்திரேலியாவும் வீழ்த்தும் பட்சத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் மூன்று அணிகளும் 6 புள்ளிகளில் இருக்கும். இருப்பினும், இந்திய அணி நல்ல ரன் ரேட்டில் இருப்பதால், இந்திய அணியே அரையிறுதிக்குத் தகுதி பெற அதிக வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Regarding whether the Indian team will advance to the semi-finals of the T20 World Cup...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.