மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

ஒருநாள் உலகக் கோப்பை 2027 நடைபெறும் 12 இடங்கள்..! 24 ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவில்!

ஒருநாள் உலகக் கோப்பை 2027 நடைபெறும் இடங்கள் குறித்து...

News image

ஒருநாள் உலகக் கோப்பையுடன் முன்னாள் வீரர்கள். - படம்: ஐசிசி

Updated On :31 ஜூலை 2026, 1:14 pm IST

ஒருநாள் உலகக் கோப்பை 2027 நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளன. இதில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆப்பிரிக்காவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த உலகக் கோப்பை 2023ல் இந்தியாவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்று அசத்தியது. இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது.

இந்த ஒருநாள் உலகக் கோப்பை 2027 போட்டிகள் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கின்றன. 14 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

மொத்தமாக 12 இடங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவில் 8 இடங்களில் நடைபெறுகின்றன.

தென்னாப்பிரிக்கா (8)

வாண்டரர்ஸ் திடல் (ஜோகன்னஸ்பர்க்), சென்ச்சுரியன் (ஷ்வானே), நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் திடல் (கேப் டவுன்), கிங்ஸ்மீட் கிரிக்கெட் திடல் (டர்பன்), செயின்ட் ஜார்ஜஸ் பார்க் (கெபெர்ஹா), மங்கவுங் ஓவல் (ப்ளோம்ஃபோன்டைன்), போலண்ட் பார்க் (பார்ல்) பஃபலோ பார்க் (கு-கோம்போ சிட்டி, முன்பு ஈஸ்ட் லண்டன் என்று அழைக்கப்பட்டது) ஆகிய 8 இடங்களில் நடைபெற இருக்கின்றன.

ஜிம்பாப்வே (3)

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே), குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ), ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் (விக்டோரியா ஃபால்ஸ்) ஆகிய 3 இடங்களில் நடைபெற இருக்கின்றன.

நமீபியா (1)

நமீபியாவில் விண்ட்ஹோக் இடத்தில் நமீபியா கிரிக்கெட் திடலில் ஒரு போட்டி நடைபெறவிருக்கிறது.

Summary

Men’s Cricket World Cup 2027 venues and brand revealed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.