சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (டிச.26) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு சார்பில் புதன்கிழமை (டிச.26) இலவச சித்த மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கழுத்து வலி, அல்சர், மூட்டுவலி, கல்லடப்பு, ஆஸ்துமா, இருமல், ரத்தசோகை, சர்க்கரை நோய், திருமூலர் மூச்சுப் பயிற்சி, சித்தர் முறை யோகா சிகிச்சை உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







