சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இளையான்குடி ஒன்றியத்தில் 110 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என இந்த ஒன்றியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சீமைச்சாமி கூறியதாவது:
மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இளையான்குடி ஒன்றியத்தில் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தான் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் வழங்காததால் சத்துணவு ஊழியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப் பிரச்சனையில் தலையிட்டு இளையான்குடி ஒன்றிய சத்துணவு ஊழியர்களுக்கு உடனே கடந்த ஜனவரி மாத ஊதியத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.