டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குழந்தைகளையும், தாயையும் அடைத்து வைத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்: மற்றொரு பெண் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடனுக்காக தாயையும், குழந்தைகளையும் வீட்டுக்குள் அடைத்து வைத்ததால் பெண்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:52 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடனுக்காக தாயையும், குழந்தைகளையும் வீட்டுக்குள் அடைத்து வைத்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மற்றொரு பெண்ணை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி தொந்தீஸ்வரி (21), தீத்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வீராயி என்ற பெண்ணிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பி செலுத்தாததால் திருப்புவனம் அருகே கலியனேந்தல் கிராமத்தில் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த தொந்தீஸ்வரியை சந்தித்து கடனை கேட்கச் சென்ற வீராயி உள்ளிட்ட சில பெண்கள் அங்கு தொந்தீஸ்வரி இல்லாததால் அவரது இரு குழந்தைகள் மற்றும் தாய் நாகவள்ளி ஆகியோரை ஆட்டோவில் கடத்தி வந்து கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். 
 இதனால் மனமுடைந்த தொந்தீஸ்வரி, கலியனேந்தல் கிராமத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 நாள்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து வீராயி உள்ளிட்ட பெண்கள் மீது பழையனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கொம்புக்காரனேந்தல் கிராமத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய வீராயியை, பழையனூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.