சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த வட்டத்திற்கு மாற்றப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள்,12 பேரூராட்சிகள்,12 ஊராட்சி ஒன்றியங்கள், 445 கிராம ஊராட்சிகள், 540-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் 75 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஜனவரி மாதம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயிர் காப்பீடு, மாவட்டத்தின் வறட்சி நிலைமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவசாயிகள் கடுமையாக விவாதித்தனர். அப்போது,விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் க.லதா,விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை ஆட்சியர் அலுவலகத்தில் நடத்துவதற்குப் பதிலாக, அந்தந்த வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடத்துவதற்கு உத்தரவிட்டார்.
அதன்படி முதன் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் தேவகோட்டையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார். ஆனால் கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன்பே பாதியில் சென்று விட்டார். இரண்டாவதாக கடந்த மார்ச் மாதம் சிங்கம்புணரியில் இக்கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர்,வேளாண் துறையின் இணை இயக்குநர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறை இணை இயக்குநர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் திருப்பத்தூர் அருகே உள்ள கே.பிள்ளையார்ப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மே மாதத்திற்கான கூட்டம் சிவகங்கை அருகே உள்ள தமறாக்கியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை. மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்களும் கலந்து கொள்ளவில்லை.
இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் மாவட்டத்தின் வறட்சி மற்றும் வேளாண் துறை பிரச்னைகள் குறித்து மன்றத்தில் கூற முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்தனர். மேலும்,மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை கிராமங்களில் நடத்துவதால், போக்குவரத்து நேரம், பயணச் செலவு உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் கலந்து கொள்வதில்லை எனவும், அவ்வாறு கலந்து கொள்ளும் நோக்கில் வரும் விவசாயிகள் அலைகழிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி அய்யாச்சாமி கூறியது: மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கடந்த நான்கு மாதங்களாக தாலுகா அளவில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டம் கிராமங்களில் நடத்தப்படுவதால் மாவட்டத்தின் பிற பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ள முடிவதில்லை. அந்தந்த கிராமத்திற்கு அருகே உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தாலும், துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்திற்கு வராததால் விவசாயிகளோ,பொதுமக்களோ தங்களது அடிப்படை பிரச்னைகளை தெரிவிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். மேலும்,இந்த கூட்டத்தினால் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.
ஆகவே,இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இனி வரும் காலங்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடத்த முன் வர வேண்டும் என்றார்.
மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவுதிருப்பத்தூர், மே 24: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் வல்லரசு (25). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவர் திருப்பத்தூர் மருதுபாண்டியர் நகரில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் வேலை பார்த்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வெளியே இருந்து இரும்பு குழாய் ஒன்றை தூக்கி வீட்டிற்குள் கொடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக குழாய் மின் கம்பியில் உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக திருப்பத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் புதிய போஸ்டர்!

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

நெல்லை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் லாக்கர் திறப்பு!

டிமான்டி காலனி - 3 முதல் ஹாய் வரை... ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


