சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் முன்னாள் படைவீரரின் படை விலகல் சான்றிதழ், அடையாள அட்டை, ஆதார் அட்டை எண், வங்கிக் கணக்குப் புத்தகம், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஓய்வூதிய ஆணை, மாணவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் படை விலகல் சான்றிதழிலுள்ள குடும்ப விவரம் உள்ளிட்டவற்றுடன் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு சிவகங்கையில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ஆர்.வரதராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?
என் உதட்டுல நீ இனிக்கிறியே... அப்படிபோடு நடன விடியோவை பகிர்ந்த த்ரிஷா!

மே மாத எண்கணித பலன்கள் – 9

ஒன்பிளஸ் பாட் 4 அறிமுகம்! அட்டகாசமான அம்சங்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

