
கல்லல் ஒன்றியத்தில் ரூ.14.5 கோடியில் வேளாண் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
சிராவயல் ஊராட்சி கிளமேடு கிராமத்தில் முன்னோடி விவசாயி வேளாண்மைத்துறையின் மூலம் முழுமானியத்தில் தெளிப்பான் நீர்பாசனம் அமைத்து விவசாயப்பணிகள் நடைபெறுவதை ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், வேளாண்துறையின்மூலம் இம்மாவட்டத்திற்கு 2018 -2019 ஆம் ஆண்டிற்கு தெளிப்பான் நீர்பாசனத் திட்டம் செயல்படுத்திட ரூ. 4 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் வேளாண் கருவிகளும், பிவிசி குழாய்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த அளவு தண்ணீரில் ஆண்டுக்கு 3 முறை விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்.
பின்னர் அரண்மனை சிறுவயல் ஊராட்சியில் மானாவாரி விவசாயத்தில் நேரடி நெல்விதைப்புப் பணிகளை பார்வையிட்ட அவர் இத்திட்டத்தில் நடப்பாண்டிற்கு ரூ. 10.50 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உதவித்தொகை மற்றும் நேரடி நெல்விதைப்பு முறையை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நாச்சியாபுரம் ஊராட்சியில் முன்னோடி விவசாயி மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்துவரும் மையத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.
மேலும் கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் 40 சதவீத மானியத்திட்டத்தில் ரூ. 3.67 லட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு மினி டிராக்டர் மற்றும் பவர் டிரில்லர் வாகனங்களை ஆட்சியர் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை துணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் பொறியியல் செயற்பொறி யாளர் மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






