ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்: சிவகங்கை ஆட்சியர்

விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.     

Published On :

விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.     
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:   விநாயகர் சதுர்த்தி விழாவை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாமல் கொண்டாட வேண்டும். 
விநாயகர் சிலை ஊர்வலத்தை மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக் கூடாது. சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் முன்னர் அவற்றில் உள்ள பூக்கள், மாலைகள், இலைகள், துணிகள் மற்றும் பிற ஆபரணங்கள் நீக்கப்பட வேண்டும். 
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை  கரைக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
சிலைகளை கரைப்பதற்கு அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்: 
சிவகங்கை இந்திரா நகரில் உள்ள கீழவாணியங்குடி ஊருணி, காளையார்கோவிலில் உள்ள தெப்பக்குளம்(கீழ்புறம்), மானாமதுரையில்  அலங்காரக்குளம், தேவகோட்டையில் கருத்தூரணி, திருப்பத்தூரில் உள்ள சங்கீயாண்டி கோவில் ஊருணி, கல்லலில் உள்ள தெப்பக்குளம், காரைக்குடியில் உள்ள கீழ்ஊருணி, சோளாங்குளம் ஊருணி, ஸ்ரீ வீரசேகர உமையாம்பிகை கோயில் எதிர்புறம் (சாக்கோட்டை), சிங்கம்புணரியில் சேவுகர் மூர்த்தி கோயில் தெப்பம், நாகமங்கலத்தில் உள்ள வெள்ளைப்பள்ளம் ஊருணி (சிங்கம்புணரி) உள்ளிட்ட இடங்களில் சிலைகளை கரைக்க  வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.