காரைக்குடி அருகே செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் மாணவர், மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றமைக்காக, அவருக்கு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரி தடகள அமைப்பு சார்பில், மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள், தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், மாநிலத்தில் உள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஜெ. மைக்கேல் வில்சன் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற மாணவரை, கல்லூரி நிர்வாகம், முதல்வர் என். பழனிச்சாமி, உடற்கல்வி இயக்குநர் எஸ்.வீரமணிகண்டன் மற்றும் ஆசிரியர், அலுவலக, பணிமனைப் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
தெர்மாகோலில் கலை உருவம்
உலக அதிசயம் எல்லோரா!

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


