புதுவயல் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 25) மாதாந்திரப்பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளன.
எனவே புதுவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









