பிரதமரின் பொது சுகாதாரத் திட்டத்தில் நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 சதவீத ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை கிடைக்கவில்லை என்று, பாஜக சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் வி. விஸ்வநாத கோபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பிரதமரின் பொது சுகாதாரத் திட்டம் என்பது வீட்டுக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு செய்யப்படுவதாகும். இத்திட் டம் அனைவராலும் பாராட்டப்படுகின்ற திட்டமாகும். ஆனால், முறையான கணக்கெடுப்பு செய்யப்படாமல் இதுவரை 60 சதவீதம் மக்களுக்கே மருத்துவக் காப்பீடு செய்துள்ள அட்டைகள் கிடைத்திருக்கின்றன.
நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 40 சதவீத ஏழை மக்கள் பெயரில் காப்பீடு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இன்னமும் அவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை கிடைக்கப் பெறாமல் உள்ளனர். ஆனால், வசதி படைத்த பலருக்கும் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, மறுகணக்கெடுப்பு நடத்தி அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொது சுகாதாரத் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







