குடியரசு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிவகங்கை மாவட்டத்திலுள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தில் (ஜன. 26) கிராம சபைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2018- 2019-ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுவது,குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியன குறித்து விவாதம் நடத்தி, தீர்மானமாக நிறைவேற்றலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









