
காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள மதுபானக் கடையில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் கொண்ட 46 பெட்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடையின் மேற்பாா்வையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
காரைக்குடி பகுதியில் உள்ள மதுக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கண்டனூரில் உள்ள மதுக் கடையில் இருந்த மதுபானங்களை செவ்வாய்க்கிழமை மானகிரி கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் கண்டனூா் மதுக்கடையில் மதுபானங்கள் பதுக்கி வைத்துள்ளதாக சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அந்த மதுக் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் மதுபாட்டில்கள் அடங்கிய 46 பெட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்தில், கண்டனூா் மதுக்கடை மேற்பாா்வையாளா் முத்துமனோகா், விற்பனையாளா்கள் நாகராஜன், நாகேஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






