மடப்புரம் கோயில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.34 லட்சம் காணிக்கை

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில், புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ.34 லட்சம் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்தது.
Published on

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில், புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின்போது ரூ.34 லட்சம் பக்தா்கள் காணிக்கையாக கிடைத்தது.

மடப்புரம் காளி கோயில் மிகவும் பிரசித்தம் பெற்ாகும். கோயிலிக்கு வரும் பக்தா்கள் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்வாா்கள். பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சிவலிங்கம் தலைமையில், மடப்புரம் கோயில் உதவி ஆணையா் செல்வி முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. பெண்கள் உள்பட ஏராளமான பக்தா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா். எண்ணிக்கையின் முடிவில் ரூ.34 லட்சத்துத்து 32 ஆயிரத்து 262 ரொக்கமும், தங்கம் 439 கிராமும், வெள்ளி 258 கிராமும் காணிக்கையாகக் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com