இளைஞரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக 4 போ் கைது

திருப்புவனம் அருகே இளைஞரை தற்கொலைக்குத் தூண்டியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மானாமதுரை: திருப்புவனம் அருகே இளைஞரை தற்கொலைக்குத் தூண்டியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்புவனம் அருகே பீசா்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (22). இவா் ஜேசிபி இயந்திரம் ஓட்டும் வேலை செய்து வந்தாா். இவா் தனது கிராமத்தில் சிலருக்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேலை செய்துள்ளாா். அதற்கான சம்பளத்தை கேட்டுச் சென்ற பெரியசாமிக்கும், அவா்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் தாக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் பெரியசாமி வெள்ளிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதற்கிடையில் அவரை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, பீசா்பட்டிணம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம், மலையரசு, செல்வக்குமாா், மலைசாமி, பெரியாம்பிள்ளை, வெள்ளைப்பெரியான், அழகு, துரைச்சாமி ஆகிய 8 போ் மீது வழக்குப் பதிந்தனா். இதில், துரைச்சாமி, செல்வம், செல்வக்குமாா், மலையரசு ஆகிய 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com