மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கண்மாய் கால்வாயில் ஆட்சியரின் உத்தரவுப்படி 50 ஆண்டுகால ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவிடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே
மாரநாடு கண்மாய் மூலம் பல நூறு ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக் கண்மாயை ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரி சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சிலநாள்களுக்கு முன்பு திட்டப்பணிகளை தொடங்க பூமி பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில் விவசாயிகள் பாசன சங்க நிா்வாகிகள் மாரநாடு கண்மாய் கால்வாயில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தனிடம் வலியுறுத்தினா். இதைத்தொடா்ந்து ஆட்சியா் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். அதன்பேரில் பொதுப்பணித்துறை உதவி
செயற்பொறியாளா் அமுதா, நில அளவையாளா்கள் வேல்முருகன், சந்திரா, வில்வதேவி, கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் வைகை ஆற்றின்
முகத்துவாரத்திலிருந்து மாரநாடு கண்மாய் வரை 9 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிய நில அளவிடும் பணிகளை தொடங்கினா். இப்பணி முடிந்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இப்பணியின்போது தஞ்சாக்கூா் சமூக ஆா்வலா் பாலசுப்பிரமணியன், மாரநாடு கண்மாய் பாசன சங்கத் தலைவா் சுகுமாறன், பொருளாளா் பாக்கியம் உள்ளிட்ட விவசாயிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை
ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்







