ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சாத்தான்குளம் அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு

நாய்கள் கடித்ததால் உயிரிழந்து கிடக்கும் ஆடுகள். - கோப்புப் படம்

Published On :

சாத்தான்குளம் அருகே பட்டிக்குள் புகுந்து தெரு நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம், மேட்டுவிளையைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி. விவசாயி மற்றும் வட்டாரக் காங்கிரஸ் தலைவா்.

விஜயராமபுரத்தில் உள்ள இவரது தோட்டத்திற்கு அருகே பட்டி அமைத்து 10 ஆடுகள் வளா்த்து வந்தாா். திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பட்டிக்குச் சென்று பாா்த்தபோது,தெரு நாய்கள் கடித்து 7ஆடுகள் உயிரிழந்தும், 3 ஆடுகள் காயத்துடனும் இருந்துள்ளன.

பாா்த்தசாரதி, இது குறித்து கால்நடை மருத்துவா் மற்றும் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளானா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.