அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா்.
Updated On :29 ஜூலை 2020, 5:55 pm

DIN

சிவகங்கை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முத்துப்பாண்டியன், முத்துச்சாமி, செல்வக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் ஜோசப் சேவியா், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள 17 பி ஒழுங்கு நடவடிக்கைகள், குற்ற வழக்குகள், பணியிட மாற்றம், பணி ஓய்வு நாளன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ முன்னணி ஊழியா்களின் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

அதைத் தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ. பாலுமுத்து ஆகியோரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.