காரைக்குடியில் இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு போராட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்து முன்னணியினர் தமிழகத்தில் கோயில்களை திறக் கோரி தோப்புக்கரணம் போடும் போரட்டம் கொப்புடையம்மன் கோயில் முன்பு நடைபெறுவதாக அறிவித்திருந்தனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்து முன்னணியினர் தமிழகத்தில் கோயில்களை திறக் கோரி தோப்புக்கரணம் போடும் போரட்டம் கொப்புடையம்மன் கோயில் முன்பு நடைபெறுவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோயில் முன்பாக மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் முதலில் தரிசனம் செய்து விட்டு கோரிக்கைகளை வாசித்தனர்.
இதில் மாவட்டப் பொதுச் செயலாளர் அக்னி பாலா மற்றும் ஜெயபால், கணேசன், தீனா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...