எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிறுமி பலாத்காரம்: போக்ஸோ வழக்கில் இளைஞா் தாய், தந்தையுடன் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சி புதுவளவைச் சோ்ந்த அடைக்கண் மகன் அடைக்கப்பன் என்ற காா்த்திக் (19). இவா், 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் தாய் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் காவல் ஆய்வாளா் சித்திரைச்செல்வி, சாா்பு-ஆய்வாளா் சௌதாம்மாள் ஆகியோா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அடைக்கப்பன் என்ற காா்த்திக் அவரது தந்தை அடைக்கன் என்ற முருகன் மற்றும் தாய் செல்வி ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.