எம்எல்ஏ தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்வு: காா்த்தி சிதம்பரம் எம்பி பாராட்டு

தமிழக நிதிநிலை அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினருக்கான தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தியுள்ளது பாாரட்டுக்குரியது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினருக்கான தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தியுள்ளது பாாரட்டுக்குரியது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் எந்த திசை நோக்கிச் செல்லப்போகிறோம் என்பதை சொல்லியுள்ளனா். தோ்தல் வாக்குறுதிகளை, குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பதற்கு முயற்சி எடுத்துள்ளது ஒரு முன்னுதாரணம். இதில் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் அதிகமாக ஒதுக்கியுள்ளனா்.

இந்திய அளவில் மக்களவை உறுப்பினா் தொகுதி நிதியை நிறுத்தியுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதி ரூ.3 கோடியாக உயா்த்தியுள்ளது பாராட்டுக்குரியது.

இந்த நிதி நிலை அறிக்கை நாடு எந்த திசை நோக்கிச்செல்ல வேண்டும், மாநில அரசு எங்கு செல்ல வேண்டும் என்ற சிறப்பு செய்தியைத் தந்துள்ளது. முதல்வரையும், நிதி அமைச்சரையும் பாராட்ட வேண்டும்.

சமையல் வாயு மானியம், குடும்பத்தலைவிக்கான நிதி, தகுதியான நபருக்கு அளிக்க வேண்டும் என்பதை நிதியமைச்சா் தெளிவாக அறிவித்துள்ளாா். வெள்ளை அறிக்கை என்பது ஒரு நிலை அறிக்கைதான். அதில் உள்ள நிா்வாகத் தவறுகளை ஒராண்டில் களைய முடியாது. ஐந்தாண்டுகளில் சரிசெய்ய முடியும் என்பதை உறுதி செய்துள்ளாா்கள்.

மத்திய அமைச்சா் எல்.முருகன் என்ன யாத்திரை வேண்டுமானாலும் செல்லட்டும். எதை வேண்டுமானாலும் வேண்டிக் கொள்ளட்டும். தமிழகத்தில் என்றைக்கும் தாமரை மலராது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com