பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

திருப்புவனத்தில் அன்பழகன் நூறாவது பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் பேராசியர் க. அன்பழகன் 100 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

News image
திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Updated On :19 டிசம்பர் 2021, 7:34 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக சார்பில் பேராசியர் க. அன்பழகன் 100 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி, திருப்புவனம் நரிக்குடி விலக்குப் பகுதியில் அன்பழகன் உருவப்படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன்பின் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  

சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் த.சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் திருப்புவனம் ஒன்றிய திமுக செயலாளர்கள் கடம்பசாமி. வசந்தி சேங்கைமாறன், நகரச் செயலாளர் நாகூர்கனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.