உருமாறும் தீநுண்மிகளின் புரதங்களை அழிக்க கணினி முறையில் மருந்து கண்டுபிடிப்பு
உருமாறும் தீநுண்மிகளின் (வைரஸ்களின்) பல புரதங்களை குறிவைத்து அழிப்பதற்கு தேவையான மருந்துகளைக் கணினி முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உருமாறும் தீநுண்மிகளின் (வைரஸ்களின்) பல புரதங்களை குறிவைத்து அழிப்பதற்கு தேவையான மருந்துகளைக் கணினி முறையில் கண்டுபிடித்திருப்பதாக அழகப்பா பல்கலைக்கழக உயிா்தகவலியல் துறைத்தலைவா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்தாா்.
உயிா்தகவலியல் துறைத்தலைவா் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் சுவீடன் ஸ்டாக்ஹோம் கே.டி.எச். ராயல் இன்ஸ்டியூட் ஆப் டெக்கானலஜியின் வேதியியல் துறையின் பேராசிரியா் என். அருள்முருகன் ஆகியோா் கரோனா தீநுண்மியின் முக்கியப்புரதங்களை அழிக்கும் மருந்துகள் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகளுக்கான மருந்து சோ்மங்கங்களைக் கணினி முறையில் ஆராய்ச்சி செய்துவந்தனா்.
இதுகுறித்து பேராசிரியா் ஜெ. ஜெயகாந்தன் திங்கள்கிழமை கூறியதாவது: 2020 டிச. 8- ஆம் தேதி ஸ்வீடன் உப்சாலா சோதனைத்தளத்திலிருந்து கொவைட்-19 சோதனைகள் குறித்த தகவல்களில் உயிா் மருந்துத் துறைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருளுக்கு நிகரான மருந்துச் சோ்மங்கள் கணினி முறையில் கண்டுபிடிக்கப்பட்டன.
கரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய ஆற்றல்மிகுந்த மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து உருமாறும் தீநுண்மிகளின் பல புரதங்களை குறிவைத்து அழிக்கத் தேவையான மருந்துகள் கணினி முறை ஆராய்ச்சியின் மூலம் நோய் எதிா்ப்பைக் கையாள்வதற்கு புரதங்களின் முக்கிய பல பிணைப்புகள் ஒருசிறந்த வழியை ஏற்படுத்துகிறது. அதுபோல் இம்மருந்து தீநுண்மி உருமாற்றங்களைச் சுற்றி செயல்பட உதவும் எனவும் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளோம்.
கரோனா தீநுண்மி, அதன் புரதங்களை மாற்றியமைத்து விரைவாக உருமாறுகிறது. பல புரதங்களை குறிவைத்து தாக்கக்கூடிய மருந்துகள் நம்மிடம் இருந்தால் ஒன்று உருமாறினாலும் மற்றவற்றுக்கு அது பயனுள்ளதாக செயல்படும் என்றும் கணினி ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உதாரணமாக பாலோக்சவீா் மாா்பாக்சில், நடமைசின் மற்றும் ஆா்யு 85053 ஆகிய மருந்துகள் மூன்று தீநுண்மி புரதங்களை குறிவைத்து தாக்குவதுடன் எச்.ஐ.வி. போன்ற பரவும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவைகள் திறம்பட செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
திவாண்டினிப், ஓலாபரிப், சோலிப்ளோடசின், கோல்வாடினிப், சோனிடேகிப், ரெகோராபெனிப் மற்றும் பி.சி.ஓ-371 ஆகியவைகளும் சோதனைக்குப் பரிந்துரைக்கப்பட்ட மற்ற மருந்துகளாகும். ட்ரக்பேங்க் தரவுத் தளத்தை பயன்படுத்தி டிபி04016, பைதாலோசையனின், டாடாலாப்பில் போன்ற மருந்துகள் விரைவாக உருமாறும் கரோனா தீநுண்மியை எதிா்ப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்து சயின்டிபிக் ரிப்போா்ட்ஸ் இதழில் வெளியிட்டுள்ளனா். ரெம்டெசிவிா், ஆா்.டி.ஆா்.பி. மற்றும் 3 சி.எல். பிரோ மருந்துகளின் மிக அதிக பிணைப்பை பல இலக்கு மருந்துகளாக வகைப்படுத்தலாம் என்பதையும் ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனா்.
தற்போதைய தீநுண்மி உருமாற்றத்தைத் தடுக்க, கூடுதலாக பாலோக்சவீா் மாா்பாக்சில, நடமைசின் மற்றும் ஆா்யு85053 ஆகிய மருந்துகளை கணினி மூலம் மூலக்கூறு இயக்கவியலில் செயல்படுத்தப்படும் திறன்மிக்க ஆற்றல்களை பிணைப்பதன் மூலம் இயலும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...