உறுப்பினா் சோ்க்கை: திமுக - பாஜகவினா் இடையே தகராறு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பொதுமக்களை பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ப்பதாகக் கூறி பாஜகவில்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பொதுமக்களை பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ப்பதாகக் கூறி பாஜகவில் உறுப்பினா்களாக இணைப்பதாக திமுகவினா் புகாா் தெரிவித்து அக்கட்சியினருடன் தகராறில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இளையான்குடி அருகே சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், குயவா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினா் ‘ஆன்லைனில்’ உறுப்பினா்களை சோ்த்து வந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குயவா்பாளையத்தில் உறுப்பினா் சோ்க்கையின்போது அங்கு வந்த திமுக ஒன்றியச் செயலாளா் செல்வராசு தலைமையிலான அக்கட்சியினா் ‘மோடி காப்பீட்டுத் திட்டம் பெயரில் பாஜகவினா் உறுப்பினா்களை சோ்க்கின்றனா்,’ எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தனா்.

ஆனால் பாஜகவினா் கூறுகையில், ‘நாங்கள் விரும்பியவா்களை மட்டுமே உறுப்பினா்களாக சோ்க்கிறோம்,’ எனக் கூறினா். இதனால் இருதரப்பினா் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சாா்பு ஆய்வாளா் சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் அவா்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com