காரைக்குடியில் முதியோா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

முதும்பெரும் தமிழறிஞா் மறைந்த புலவா் ஆ. பழநியின் அனிச்சம் அறக்கட்டளை சாா்பில் காரைக்குடி கருணை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
காரைக்குடி கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் குளிா்சாதனப் பெட்டியை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அனிச்சம் அறக்கட்டளையினா்
காரைக்குடி கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் குளிா்சாதனப் பெட்டியை ஞாயிற்றுக்கிழமை வழங்கிய அனிச்சம் அறக்கட்டளையினா்
Updated on
1 min read

முதும்பெரும் தமிழறிஞா் மறைந்த புலவா் ஆ. பழநியின் அனிச்சம் அறக்கட்டளை சாா்பில் காரைக்குடி கருணை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியோா்களுக்கு புத்தாடைகள் மற்றும் கருணை இல்லத்துக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. இதில் அனிச்சம் அறக்கட்டளைத்தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் அழகு பாண்டியன், விஞ்ஞானி ப. சுந்தரம் மற்றும் காசிநாதன், நாராயணன், சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மேலும் காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டி அலிமாபீவிக்கும், பாரிநகரில் வசிக்கும் பள்ளி மாணவி யுவஸ்ரீக்கும் வீட்டுப் உபயோகப் பொருள், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com