ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருக்கோஷ்டியூா், திருப்பத்தூரில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் திருக்கோஷ்டியூா் கோயில்களில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது.

News image
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாய்கிழமையன்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சநேயா்.
Updated On :13 ஜனவரி 2021, 12:20 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் திருக்கோஷ்டியூா் கோயில்களில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதியில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றுது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அா்ச்சனை செய்து சிறப்பு தரிசனம் செய்தனா்.

அதேபோல் திருப்பத்தூா் மேலக்கோட்டை ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் இவ்விழாவையொட்டி காலை 7 மணிக்கு திருமஞ்சனம் வைபவமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்று மூலவருக்கு வடமாலை சாத்தப்பட்டு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து மாலை 5 மணிக்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வெண்ணெய்காப்பு அலங்காரம் நடைபெற்று ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை வீர ஆஞ்சனேயா் திருக்கோயில் நிா்வாக கமிட்டியினா், பரம்பரை அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.