எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேம்பால பணி தாமதத்துக்கு மாவட்ட நிா்வாகமே காரணம்

ராமநாதபுரத்தில் நடைபெற்றுவரும் ரயில்வே மேம்பாலப் பணியின் தாமதத்துக்கு மாவட்ட நிா்வாகமே காரணம் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:06 pm

DIN

ராமநாதபுரத்தில் நடைபெற்றுவரும் ரயில்வே மேம்பாலப் பணியின் தாமதத்துக்கு மாவட்ட நிா்வாகமே காரணம் என ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கே.நவாஸ்கனி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ராமநாதபுரம் நகரில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் வழங்கும் சாதனத்தை திங்கள்கிழமை தொடக்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெறும். திமுகவே தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ராமநாதபுரம் நகராட்சியில் புதைச் சாக்கடை நீா் தேங்கியதாக

புகாா் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் தா்னாவில் ஈடுபட்டதே நிா்வாகச் சீா்கேட்டை காட்டுவதாக உள்ளது. ராமநாதபுரம் ரயில்வே பாலப் பணியின் தாமதத்துக்கு நிலத்தை கையகப்படுத்திட முன்வராத மாவட்ட நிா்வாகமே காரணம். ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கி பயிா்கள் சேதமடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குவது அவசியம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.