நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மானாமதுரையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை மதியம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்தியவர்களை வெளியேற்றி வட்டாட்சியர் ஆ.தமிழரசன் நடவடிக்கை மேற்கொண்டார்.

News image

மானாமதுரையில் பழைய பஸ் நிலையம் அருகேயேள்ள தொழுகை பள்ளிவாசலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

Updated On :11 ஜூன் 2021, 11:20 am

DIN

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை மதியம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்தியவர்களை வெளியேற்றி வட்டாட்சியர் ஆ.தமிழரசன் நடவடிக்கை மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தொழுகை பள்ளிவாசலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடப்பதாக  மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசனுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவர் மதியம் அந்த பள்ளிவாசலில் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு 40-க்கும் மேற்பட்டோர் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தொழுகை நடத்திய அவர்களை கண்டித்து பள்ளிவாசலை விட்டு வெளியேறுமாறு வட்டாட்சியர் தமிழரசன் அறிவுறுத்தினார். இதையடுத்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக பள்ளிவாசலை விட்டு வெளியேறினர்.

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி பள்ளிவாசலில் தொழுகை நடத்தக் கூடாது என அவர்களை வட்டாட்சியர் தமிழரசன் கண்டித்தார். மேலும் அரசு அறிவிக்கும் வரை பள்ளிவாசலில் தொழுகை நடத்த மாட்டோம் என ஜமாத்தார்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

கட்டுப்பாடுகளை மீறி  தொடர்ந்து இதுபோன்ற தொழுகை சம்பவங்களில் ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வட்டாட்சியர் எச்சரித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.