எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அஞ்சல் அலுவலகங்களில் மாா்ச் 5 வரை தங்கப்பத்திரம் விற்பனை

சிவகங்கை மாவட்டத்தில் வரும் மாா்ச் 5 வரை தங்கப் பத்திரம் விற்பனை நடைபெற உள்ளதாக சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:35 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் வரும் மாா்ச் 5 வரை தங்கப் பத்திரம் விற்பனை நடைபெற உள்ளதாக சிவகங்கை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் டி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அஞ்சலகக் கோட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை மாா்ச் 1 முதல் 5 வரை (5 நாள்கள் மட்டும்) நடைபெற உள்ளது. ஒரு தனிநபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராமுக்கு ரூ.4,662 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தங்கள் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும். மேலும், 8 ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிா்வுத் தொகை வழங்கப்படும்.

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.