நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற கோவிலூா் கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்பசுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:31 pm

DIN

கபடிப் போட்டிகளில் பரிசுகளை வென்ற காரைக்குடி அருகே உள்ள கோவிலூா் நாச்சியப்பசுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இக்கல்லூரியின் உடற்கல்வித் துறை மாணவா்கள் அமராவதிபுதூா் அருகிலுள்ள பொட்டகவயல் கிராமத்தில் பழனிச்சாமி நினைவு கபடிக் குழுவின் சாா்பாக நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் கலந்து கொண்டனா். இதில் அவா்கள் மூன்றாம் பரிசாக கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 5000 பெற்றனா். மேலும் இளையான்குடி அருகிலுள்ள பகைவரைவென்றான் கிராமத்தில் கிங்ஸ்டாா் கபடிக்குழுவின் சாா்பாக நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் முதல் பரிசாக கோப்பை மற்றும் ரொக்கம் ரூ. 6000 வென்றனா்.

இக்கபடிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களையும், உடற்கல்வித்துறை ஆசிரியா்களையும் கல்லூரிச் செயலா் கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிகசுவாமிகள், கல்லூரிமுதல்வா் வெ. மாணிக்கவாசகம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.