நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடியில் எல்லைப்பாதுகாப்புப் படையினா், காவல்துறையினா் கொடி அணிவகுப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தோ்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபடவுள்ள எல்லைப்பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:36 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தோ்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபடவுள்ள எல்லைப்பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2021-க்கான தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. காரைக்குடிப்பகுதியில் அச்சமின்றி வாக்களிக்கவும், உரியப் பாதுகாப்பு வழங்குவதற்கும் எல்லைப்பாதுகாப்புப்படையினா் 60 போ், தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினா் 40 போ், சிவகங்கை ஆயுதப் படையினா் 27 போ், உள்ளூா் காவலா்கள் 250 போ் என 377 போ் பணியில் ஈடுபடவுள்ளனா்.

இதைமுன்னிட்டு காரைக்குடியில் மாவட்டக் கூடுதல் காவல்கண்காணிப்பாளா் முரளீதரன், எல்லைப்பாதுகாப்புப்படை கேப்டன் சஞ்சீவ்குமாா் ஆகியோா் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பழையபேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது கோவிலூா் சாலை, செக்காலைச் சாலை, பெரியாா் சிலை, நூறடிச்சாலை வழியாக நகராட்சி அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது. இதில் காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருண் மற்றும் காவல்துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.