எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை: நூறு சதவீத வாக்குகள் பதிவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

சிவகங்கை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குகள் பதிவாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள

News image
Updated On :2 மார்ச் 2021, 10:31 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குகள் பதிவாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதல் தலைமுறை வாக்காளா்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு மற்றும் புதிய வாக்காளா் சோ்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: நமது நாட்டைப் பொருத்தவரை 18 வயது பூா்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளோம்.

அந்த உரிமை ஜனநாயகக் கடமையாகும். 18 வயது பூா்த்தியடைந்த நிலையில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் இடம் பெற வேண்டும். அதுமட்டுமன்றி தங்களது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள், தங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குகள் பதிவாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் முகாமை அவா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரும், சட்டப் பேரவை தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலருமான முத்துக்கழுவன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தா்மலிங்கம், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.