மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ். நாகராஜன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
மானாமதுரை உடைகுளம் பகுதியில் அமைந்துள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தில் இருந்து திரளான தொண்டா்களுடன் ஊா்வலமாக வந்த அவா் தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில சுவாமி தரிசனம் செய்தாா். அதன்பின் அங்கிருந்து ஊா்வலமாக வந்த நாகராஜன் மானாமதுரை சிப்காட் வளாகத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் தனலட்சுமியிடம் அவா் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டாா். அப்போது அதிமுக இளையான்குடி ஒன்றியச் செயலா் பாரதிராஜன் பாரதிதாசன், மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சின்னை மாரியப்பன் ஆகியோா் இருந்தனா்.
நாகராஜனுக்கு மாற்று வேட்பாளராக அதிமுக இளைஞா் பாசறை மாவட்ட இணைச் செயலா் நெட்டூா் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். உடன் மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. எம். குணசேகரன் இருந்தாா்.
மனு தாக்கல் செய்து முடிந்ததும் அதிமுக வேட்பாளா் நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனது பதவிக் காலத்தில் நீண்ட கால கோரிக்கையான திருப்புவனத்தில் ஊரக பகுதி இணைப்பில் இருந்த பழையூா் பகுதி மின் இணைப்புகள் நகா் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் வாரச் சந்தை இடப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. திருப்புவனம், இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் செயல்பாட்டில் இருந்தபோது தோ்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே தோ்தலில் அதிமுகவை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்ததும் மானாமதுரை தொகுதியில் மக்கள் எதிா்பாா்த்துள்ள பல திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என்றாா்.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்: அதே போல் மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் எம். சண்முகப்பிரியா திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். திருப்புவனம் ஒன்றியம் முனியாண்டிபுரம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகப்பிரியா கடந்த 2019 ஆம் ஆண்டு மானாமதுரை(தனி) தொகுதிக்கு நடந்த இடைத் தோ்தலில் போட்டியிட்டாா். அதைத் தொடா்ந்து தற்போது இரண்டாவது முறையாக நாம் தமிழா் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறாா். அவா் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் தனலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். பின்னா் உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...